ரிஷப லக்னம்

உங்கள் 3-ஆமிட அதிபதி சந்திரன் ஆவார். இவர் உங்கள் லக்னத்திலேயே உச்சமடைவது வெகு சிறப்பு. இதனால் நீங்கள் ரிஷப லக்னம், ரிஷப ராசியாக இருப்பின், ஏதோ ஒரு கைவேலை அல்லது கமிஷன் என உபரி வருமானத்துக்கு வழிவகுத்து கொள்வீர்கள். உங்களையும் அறியாமல் இந்த எண்ணம் தோன்றி, முழு முயற்சி எடுத்து, முன்னேற்றம் காண்பீர்கள். சந்திரன் உச்சமாகி இருப்பின், பெரும்பாலும் பயணம் சார்ந்த இனங்களில் உபரி வருமானம் ஈட்டுவீர்கள்.

Advertisment

சந்திரனும், சுக்கிரனும் 

சேர்ந்து சம்பந்தம் இருப்பின், வேலை வாய்ப்பு சம்பந்தமாக அல்லது வழக்குகளில் தஸ்தாவேஜிக்கள் தயாரிப்பது, வாடகை வீட்டு ஒப்பந்த பத்திரம் தயாரிப்பது, சில சேவைகள் சம்பந்தமாக, உரிமையாளர் சார்பில் அலைவது, பால் விற்பனை முகவர்கள், அல்லது பால் பாக்கெட் போடுவது, இரு சக்கர பயண ஓட்டுனர் தகவல் தொடர்பு ஆர்டர்கள் மூலம் உணவு கூல்ட்ரிங்கஸ், இனிப்பு பானங்கள் இவற்றை டெலிவரி செய்வது என உணவு சார்ந்த சிறு தூரப் பயண சேவைகளை, பகுதி நேர வேலையாக செய்து உபரி வருமானம் ஈட்டுவர். 

Advertisment

சந்திரனும், புதனும் சேர்க்கை 

இருப்பின் மணியார்டர், புத்தகங்கள் வழங்கும் தபால் மற்றும் தனியார் துறை, பங்குவர்த்தக முகவர். சுற்றுலா, பொழுது போக்கு ஏற்பட்டாளர், பூர்வீக அல்லது தாய் நாட்டிலிருந்து பணம் வசூலித்து அனுப்பும் வகையினர், அலுவலகம் செல்லும் பெற்றோரின், குழந்தைகளை பகுதி நேரமாக தன் வீட்டில் வைத்து பராமரிக்கும் அமைப்பினர், பழைய கால உணவை தன் வீட்டில் சமைத்து, வேண்டியவர்களுக்கு கொடுத்து அனுப்பும் பகுதி நேர குடும்பத்தினர், 

சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி  கொடுக்கும் பிரிவினர், ட்யூசன் சொல்லிக்கொடுக்கும் குடும்பத் தலைவிகள், உணவு டெலிவரி செய்யும் பகுதி நேர மாணவர்கள் என இவர்கள், இந்தவிதமான வேலைகளை பகுதி நேரத்தில் செய்து, உபரி வருமானம் சம்பாதிப்பர்.

Advertisment

சந்திரனும், சூரியனும் 

சேர்க்கை பெற்றால் அரசு பள்ளியில், சிறப்பு வகுப்புகள் பகுதி நேரமாக பணியாற்றுவர். அரசு சார்ந்த, படிவங்களை, அலுவலகத்தின் ஒரு பகுதியில் அமர்ந்து எழுதி நிரப்பி கொடுப்பது, மனுக்கள் எழுதி தருவது, காணாமல் போன கிணற்றை கண்டுபிடிக்க யாரிடம் விண்ணப்பம் கொடுக்க வேண்டும் எனும் தகவலை கூறுவது, பள்ளி வாகனங்கள் சார்ந்த தொழில், அரசு வாகனங்களுக்கு, தனியார் வாகனம் சம்பந்தமான பெர்மிட் விஷயம், பரீட்சைகளில் அதுவும் அரசு பணி சார்ந்த பரீட்சைகளில் எளிதில் வெற்றியடைய பயிற்சி, பகுதி நேர நூல் நிலையம், கார் ஓட்ட பயிற்சி என இவ்வகையில் பகுதி நேர வேலை பார்த்து உபரி வருமானம் கொள்வர்.

சந்திரனும் செவ்வாயும் 

 சேர்ந்தால் கல்யாண ஏற்பாடு செய்பவர். பெண் பிள்ளை பற்றிய தகவல்களை பரிமாற்றிகொள்வர். சுற்றுலா முகவர், முக்கியமாக நிலம், மனை விற்பனை தரகு, சமையல் கான்ட்ராக்ட்,  சமையல் ஆட்களை ஒருங்கிணைப்பவர், கட்டடம் கட்ட செங்கல்களை வாங்கி, அனுப்பும் வேலை, திருமணமான புதுமண தம்பதிகளின், வெளிநாட்டுக்கு அனுப்பும்முன் முயற்சி திருமண முன்பதிவு வேலை, வணிகர்களையும், முதலீடு செய்ய தயாராக இருக்கும் பங்குதாரர்களையும் சந்திக்க வைக்கும் வேலை, சில வழக்குகள், சண்டை, தாவாக்களை அவுட் ஆப் கோர்ட் என்ற முறையில் சமாதானமாக போகச் செய்தல் என இம்மாதிரி விஷயங்களில் தங்கள் நேரப் பகுதியை செலவழித்து உபரி வருமானம் வரச் செய்வர்.

சந்திரனும் குருவும் 

இந்த அமைப்பு அனேகமாக அரசியல் சார்ந்து அமையும். இவர்கள் தங்கள் பகுதி நேர தொழிலாக, அரசியல் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பர். எல்லா கட்சிக்கும், வேறு பாடின்றி இந்த வேலையை  செய்வர். கோவில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்வர். இவர்கள் அனேகமாக கடல், நதி, நீர் வழிகள் இவை சார்ந்து உபரி வருமானம் பெறுவர். கடல் அருகிலுள்ள கோவில் தர்சன வழிகாட்டியாக இருப்பர். சிலர் கடலுக்குள் அல்லது நதியின் நடுவிலுள்ள வழிபாட்டு ஸ்தலத்துக்கு அழைத்து செல்லும் சுற்றுலா நடத்துவர். இதிலும் சிலர் கடலுக்கு அடியில் டைவ் அடிப்பது, அதனை சொல்லித் தருவது, கடலுக்கு அடியில் சினிமா படபிடிப்பு, கல்யாணம் செய்வது போன்ற செயல்களை செய்யும் அமைப்பாளராக இருப்பர். கப்பலில் வேலை செய்வர். அருவிகளில் பரிசல் ஓட்டி, பகுதி நேர வேலை செய்வர். 

சந்திரனும், சனியும்

ரிஷப 3-ஆம் அதிபதி சந்திரன் சனியுடன் சேர்ந்தால், தொழில் யாருக்கெல்லாம், டல்லாக மந்தமாக, வளர்ச்சி இல்லாமல் இருக்கிறதோ, அவர்களை அணுகி அவர்கள் தொழிலை சுறுசுறுப்பாக்க, பளிச்சிட செய்ய, பரபரப்பாக, விளம்பர உத்திகளை கொடுப்பர். கடை முதலாளியின் தந்தை அல்லது பேரன், அட, கடை முதலாளியை, அங்கு மாட்டியிருக்கும் கோட், சூட் என எடுத்து மாட்டி, போட்டோ எடுத்து விளம்பரப்படுத்திவிடுவர். இதனால் தொழில் வளர்ச்சி அடையும். சிலர் பெட்ரோல் போன்ற எரிபொருள் ஏஜென்சி எடுக்க கூடமாட இருந்து உதவி செய்வர் இதனால் உபரி வருமானம் ஈட்டுவர். தொழில்சாலைகளில் விழும் பழைய இரும்பு பொருட்களை, டன் கணக்கில், ஏலம் எடுத்து, பின் அதனை வைத்து கோடி கணக்கில் சம்பாதித்துவிடுவர். பொதுவாக இந்த இணைவு, கடகத்தாருக்கு, பழைய வாகனம், 

பழைய படகு, பழைய கப்பல் உடைப்பது, பழைய கால்வாய்களை உடைத்து பின் சீர் செய்வது, நடுவில் புதுகால்வாயையும் உடைத்து சீர்செய்வது என இவ்வகை ஒப்பந்தங்கள் இவர்களை உபரி வருமானம் மட்டுமல்ல, சமயத்தில் கோடீஸ்வரர்கள் ஆக்கிவிடும். 

சந்திரனும் ராகுவும்

ரிஷபத்தின் 3-ஆம் அதிபதி சந்திரன், ராகுவுடன் சுபத்தன்மையுடன் இருப்பின், குடிக்கும் தண்ணீர், கூல்ட்ரிங்ஸ் அசைவ உணவு, பெட்ரோல், மண்ணெய் ஒப்பந்தம். வெளிநாட்டு நீர் சார்ந்த பயண திட்டம், வெளிநாட்டு பயணங்களில் வயதானவர்களை பத்திரமாக அழைத்துச் செல்லும் கேர் டேக்கர் பணி, கடல் சார்ந்த பயிற்சி, நீச்சல் பயிற்சியாளர், அசைவ சூப் சமைக்க சொல்லித்தரும் சமையல் பயிற்சியாளர், பெண்களுக்கு மன தைரியம், தற்காப்பு கலைகள் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் என இதுபோன்ற பிறர் அரிதாக செய்யும் செயல்களை, பகுதி நேரமாக செய்து உபரி பணம் சம்பாதிப்பார்.

சந்திரனும் கேதுவும்

ரிஷபத்தின் 3-ஆம் அதிபதி சந்திரன் கேதுவுடன் சேர்ந்தால் அது சுபத்தன்மை, சுப பார்வையுடன் இருந்தால், சாக்கடை, பள்ளம் தோண்டும் பணி, கடல், நதிகளுக்கு அடியில் சுரங்கம் அல்லது கேபிள் அமைக்கும் பணி, மீனவர், பெண்களுக்கான உடைகளை வெட்டும் கட்டிங் மாஸ்டர் ஒப்பந்தம் என இவை சம்பந்தம் கிடைக்கும்.

சந்திரன் உச்சம் பெற்றால், தொழிலாளர்கள், பெண்கள், கடல் பாதுகாப்பு, நீர்வளம், சதுப்பு காடுகள் குடிதண்ணீர் என இவை சார்ந்து போராடுவீர்கள்.             


-தொடரும்